Home 13வது பொதுத் தேர்தல் “படாவியை விட மோசமான நிலையை நஜிப் சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை” மகாதீர் அதிருப்தி

“படாவியை விட மோசமான நிலையை நஜிப் சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை” மகாதீர் அதிருப்தி

530
0
SHARE
Ad

mahathir1கோலாலம்பூர், மே 07 – பொதுத்தேர்தலில் பிரதமர் நஜிப் இத்தனை மோசமான பின்னடைவை சந்திப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

இதற்கு முன் பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவி தலைமையிலான தேசிய முன்னணி அரசு, கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் 140 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியது.

ஆனால் அதை விட குறைவாக 133 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே  நஜிப் தலைமையிலான அரசு கைப்பற்றியுள்ளது என்றும் மகாதீர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்வதாக அம்னோவிடமும், தேசிய முன்னணி ஆதரவாளர்களிடமும் பிரதமர் நஜிப்  வாக்குறுதியளித்திருந்தார்.

ஆனால் அவரால் அப்துல்லா படாவியின் சாதனையைக் கூட தொட முடியாமல் வெறும் 133 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இதனால் அம்னோவின் கடுமையான விமர்சனங்களுக்கும், அம்னோவிலிருந்து ஒதுக்கப்படும் நிலைக்கும் நஜிப் தள்ளப்படலாம்” என்று வெளிப்படையாக மகாதீர் கூறியுள்ளார்.

இருப்பினும், அம்னோவின் ஆதரவு இருக்கும் வரை நஜிப் தனது தலைமைப் பொறுப்பை தொடர்வார் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணிக்கு இது சரியான பாடம்

தேசிய முன்னணிக்கு 2013 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் ஒரு சிறந்த பாடம் என்றும், இனி வரும் தேர்தல்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் மகாதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு சீன வாக்காளர்களின் வாக்குகளைப் பெற இயலாததால், அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்திருக்கும் மசீச விற்கு பதிலாக, இனி ஜ.செ.க சீன மக்களின் சார்பாக அம்னோவுடன் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

ஆனால் எல்லா விதத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கும் ஜ.செ.கவால், அம்னோவுடன் நிச்சயம் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது என்றும் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.