Home இந்தியா “கர்நாடகா தேர்தல் தோல்வி பா.ஜ வுக்கு ஒரு பாடம்’ – அத்வானி

“கர்நாடகா தேர்தல் தோல்வி பா.ஜ வுக்கு ஒரு பாடம்’ – அத்வானி

426
0
SHARE
Ad

Tamil_News_large_71180820130513003646புதுடில்லி, மே 13 – “கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள், எனக்கு வியப்பு அளிக்கவில்லை.அதே நேரத்தில் பா.ஜ (பாரதிய ஜனதா கட்சி) க்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது’ என அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

தனது வலைப் பக்கத்தில் அத்வானி இது கூறியிருப்பதாவது கூறியிருப்பதாவது,

“கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ  தோல்வி அடைந்ததற்காக வருந்துகிறேன். ஆனாலும் தோல்வியை கண்டு நான் வியப்படையவில்லை. அங்கு வெற்றி பெற்றிருந்தால் தான் நான் வியப்படைந்திருப்பேன். பொதுமக்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆதரவு அமைச்சர்களான பன்சால் மற்றும் அஸ்வனி குமாரை பதவி விலகும்படி சோனியா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவர்களும் பதவி விலகியுள்ளனர்.

இதன் மூலம் தன் அமைச்சரவை சகாக்கள் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை பிரதமர் மன்மோகன் சிங் இழந்துவிட்டார். பிரதமருக்கு உண்மையிலேயே சுயமரியாதை இருந்தால் அவர் பதவி விலக வேண்டும்.

பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். கர்நாடகாவில் பா.ஜ ஆட்சியில் நடந்த ஊழலே தற்போதைய தோல்விக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.அப்படியெனில் அதே ஊழல் விவகாரம் பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக எதிரொலிக்காதா என்ன?இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.