Home வணிகம்/தொழில் நுட்பம் “மாலிண்டோ ஏர்” – மலிவு விலை விமான நிறுவனம் ஜூன் முதல் சுபாங்கிலிருந்து செயல்படும்.

“மாலிண்டோ ஏர்” – மலிவு விலை விமான நிறுவனம் ஜூன் முதல் சுபாங்கிலிருந்து செயல்படும்.

624
0
SHARE
Ad

Malindo-Air-featureமே 14 – ஒரு காலத்தில் கோலாலம்பூரின் விமான நிலையம் இருந்த சுபாங் பகுதி மீண்டும் முக்கிய விமானத் தளமாக உருமாறலாம் என்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

“மலிண்டோ ஏர்” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள மலிவு விலை விமானப் பயண நிறுவனத்தின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், சுபாங்கிலிருந்து தனது சேவைகளை ஜூன் மாதம் முதல் அந்நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுபாங்கிலுள்ள ஸ்கை பார்க் விமானத் தளத்திலிருந்து மலிண்டோ ஏர் நிறுவனத்தின் சேவைகள் தொடங்கும்.

Turboprops எனப்படும் சிறிய ரக விமானங்களைக் கொண்டு, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரங்களைக் கொண்ட நகர்களுக்கான பயணங்களை மலிண்டோ ஏர் சுபாங் விமான தளத்திலிருந்து நடத்தும்.

ஏறத்தாழ 6 சிறிய ரக விமானங்களை தற்போது மலிண்டோ ஏர் கொண்டிருக்கின்றது. இவை தென் தாய்லாந்திலுள்ள நகர்களுக்கும், வடக்கு இந்தோனிசியாவிலுள்ள நகர்களுக்கும் பயணம் மேற்கொள்ளப்படுவதற்குப் பயன்படுத்தப்படும்.

இந்த சிறிய ரக விமானங்களில் 72 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.

அதே வேளையில் ஜெட் விமானங்களைப் பயன்படுத்துவதற்கும், இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலான பயணங்களுக்கும், சிப்பாங்கிலுள்ள அனைத்துல விமான நிலையத்தை மலிண்டோ ஏர் பயன்படுத்தும்.

தற்போது மாஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபையர்பிளை (Firefly) நிறுவனமும், பெர்ஜெயா ஏர் நிறுவனமும் சுபாங் ஸ்கை பார்க் விமான தளத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

மாலிண்டோ நிறுவனத்தில் மலேசியாவின் தேசிய வான்வெளி மற்றும் தற்காப்பு தொழில் நிறுவனம் (National Aerospace and Defence Industries Sdn Bhd) 51 சதவீத பங்குகளையும், இந்தோனிசியாவின் பிடி லயன் குழுமம்(PT Lion Group) 49 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கின்றன.

லயன் குழுமம் “லயன் ஏர்” என்ற மிகப் பெரிய விமான சேவை நிறுவனத்தையும், “விங்ஸ் ஏர்” என்ற விமான சேவை நிறுவனத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. “பாத்தேக் ஏர்” என்ற மூன்றாவது நிறுவனத்தையும் அது விரைவில் தொடக்கவிருக்கின்றது.