Home உலகம் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு ஒபாமா வாழ்த்து

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு ஒபாமா வாழ்த்து

463
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், மே 15- பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அதிக  தொகுதிகளை பெற்றுள்ளது.

இதனால், அடுத்த பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஆகிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நவாஸ் ஷெரீப்புடன்  தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறியிருப்பதாவது:-

மே 11-ம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக  தொகுதிகள் பெற்று ஆட்சி அமைக்கவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கு அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே பரஸ்பர வளர்ச்சி குறித்து இரு நாடுகளும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதில் நீண்ட கால வரலாறு உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்த விசயங்களில், ஜனநாயக முறைப்படி அமையவுள்ள இந்த அரசுக்கு மேலும் அமெரிக்காவின் ஆதரவு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.