Home வணிகம்/தொழில் நுட்பம் பெரும் வருமானத்தை இழந்து அமைச்சர் பதவி ஏற்கும் பால் லோ, அப்துல் வாஹிட்!

பெரும் வருமானத்தை இழந்து அமைச்சர் பதவி ஏற்கும் பால் லோ, அப்துல் வாஹிட்!

561
0
SHARE
Ad

combo-wahid-paulபெட்டாலிங் ஜெயா, மே 21 – அரசியல் கட்சிகளைச் சாராமல், புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள தொழில் துறை நிபுணர்களான டத்தோஸ்ரீ அப்துல் வாகிட் ஓமார் மற்றும் டத்தோ பால் லோ செங் குவார் ஆகிய இருவரும் தங்களின் பெரும் வருமானத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, குறைந்த வருமானமே உடைய அரசாங்கப் பதவிகளை ஏற்றுள்ளனர்.

முன்னாள் மலாயன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான வாகிட் கடந்த வருடத்தில் மட்டும் 6.26 மில்லியன் ரிங்கிட் வருமானம் பெற்றுள்ளதாக புலூம் பெர்க் (Bloomberg) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மலாயன் வங்கி குழுமத்தின் ஆண்டிறுதிக் கணக்குப்படி வாகிட் 2.96 மில்லியன் வருமானம் ஈட்டியிருப்பதாக தி ஸ்டார் (The Star) பத்திரிக்கை அறிக்கையும் கூறுகிறது.

#TamilSchoolmychoice

மலாயன் வங்கியின் ஆண்டறிக்கையின் படி, வாகிட்டின் 2010 – 2011 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானம் முறையே 4.68 மில்லியன் மற்றும் 4.7 மில்லியன் ஆகும்.

அதே போல் பால் லோவும் குறைந்தது 560,000 ரிங்கிட் ஆண்டு வருமானம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன்வே ஹோல்டிங்க்ஸ், போஸ் மலேசியா மற்றும் மலேசியன் ஷீட் கிளாஸ் ஆகிய நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றியதன் மூலம் பால் லோ முறையே 200,000 ரிங்கிட் ஆண்டு வருமானமும், 30,000 ரிங்கிட் மாத வருமானமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வாகிட் மற்றும் பால் லோவின் மாதம் வருமானம் 14,970.20 ரிங்கிட் மற்றும் செனட்டர் பதவிக்கு மாதம் 4,112.79 ரிங்கிட் ஆகும்.