Home நாடு தம்ரின், ஹாரிஸ், சப்வான், தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு – குற்றத்தை மறுத்து...

தம்ரின், ஹாரிஸ், சப்வான், தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு – குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

736
0
SHARE
Ad

tian

கோலாலம்பூர், மே 29 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பான கருத்தரங்கில் அரசாங்கத்திற்கு எதிராக பேசிய குற்றத்திற்காக நேற்று மீண்டும் கைது செய்யப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம், பாஸ் கட்சியைச் சேர்ந்த தம்ரின் கப்பார் மற்றும் மாணவர் போராட்டவாதி முகமட் சப்வான் ஆகியோர் இன்று அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர்.

கடந்த மே 13 ஆம் தேதி கோலாலம்பூர் சீன அசம்ப்லி மண்டபத்தில் இரவு 8.55 மணியிலிருந்து  11.15 மணிக்குள் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இக்குற்றச்சாட்டை எதிர்த்து அவர்கள் நால்வரும் விசாரணை கோரியதைத் தொடர்ந்து, நீதிபதி நோர்ஷாரிதா ஆவாங் அவர்கள் அனைவரையும் 5000 ரிங்கிட் பிணையில் விடுவித்து வழக்கு விசாரணையில் ஜுலை 2 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இக்குற்றச்சாட்டுப்படி அவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனையும், 5000 ரிங்கிட் அபராதமும் அல்லது தேசநிந்தனைச் சட்டம் 1948, பிரிவு 4(1) என்ற பிரிவின் படி இவை இரண்டும் வழங்கப்படலாம்.

கடந்த மே 23 ஆம் தேதி மாணவர் போராட்டவாதி ஆடாம் அட்லி தன் மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்த்து விசாரணை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.