Home உலகம் ரங்கசுவாமி ஸ்ரீநிவாசனுக்கு தேசிய விருதை ஒபாமா வழங்கினார்.

ரங்கசுவாமி ஸ்ரீநிவாசனுக்கு தேசிய விருதை ஒபாமா வழங்கினார்.

670
0
SHARE
Ad

02DNRIஅமெரிக்கா,பிப்.4- இந்திய அமெரிக்கரான ரங்கசுவாமி ஸ்ரீநிவாசனுக்கு தொழில்நுடப் மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய விருதை அதிபர் பராக் ஒபாமா வழங்கினார். லேசர் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அவருக்கு இவ்விருதுக்கு வழங்கப்பட்டது. சாமுவேல் பிளம் மற்றும் ஜேம்ஸ் வெய்ன் ஆகிய விஞ்ஞானிகளுடன் இணைந்து இவ்விருதைப் பெற்றார் ஸ்ரீநிவாசன்.

தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய விருது, அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் உயரிய விருதாகும். 1985-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

#TamilSchoolmychoice

அறிவியல் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறிவியல் துறையில் சாதனைகள் புரிந்த 12 விஞ்ஞானிகளுக்கு ஒபாமா விருது வழங்கினார். விருது பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒபாமா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் 1950ஆம் ஆண்டு அறிவியல் பட்ட மேற்படிப்பை முடித்த ஸ்ரீநிவாசன், 1956இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்பை நிறைவு செய்தார். 2002-ம் ஆண்டு அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்கான “ஹால் ஆஃப் ஃபேம்’ விருதைப் பெற்றார். இவர், தனது 21 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமையைப் பெற்றுள்ளார்.