Home கலை உலகம் கமலின் அடுத்த படம் உத்தம வில்லன்?

கமலின் அடுத்த படம் உத்தம வில்லன்?

571
0
SHARE
Ad

ஜூன் 12- விஸ்வரூபம்-2 படத்துக்கு பின் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை கமல் ஹாசன் இயக்கி நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.

kamal-sliderஇதில்  கமலுடன் ஜோடி சேரப் போவது காஜல் அகர்வால். இது, ஒரு அதிரடி காட்சிகளும் நகைச்சுவைகளும் நிறைந்த  கதையாக இருக்கும் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.

இதில் கமல்ஹாசன் வில்லனாகவும் நடிக்கப் போகிறாராம். ஆனால் அதிரடி வில்லனாக அல்லாமல் சிரிப்பு வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

படத்துக்கு பெயர் உத்தம வில்லன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விஸ்வரூபம்-2 பட வேலைகள் முடிந்தபின் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.