Home வணிகம்/தொழில் நுட்பம் “ரூபாயின் வீழ்ச்சி சரி செய்யப்படும்! முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம்” – சிதம்பரம்

“ரூபாயின் வீழ்ச்சி சரி செய்யப்படும்! முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம்” – சிதம்பரம்

478
0
SHARE
Ad

chidambaram-sliderபுதுடில்லி, ஜூன் 13 – : இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும்வீழ்ச்சி குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம், விரைவில் அதுசரியாகும் என இந்தியாவின் மத்திய நிதிய‌மைச்சர் ப.சிதம்பரம் (படம்) தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

டில்லியில்செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் கூறியதாவது:-

“நாட்டின் வளர்ச்சிக்கு‌தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதம் முதல் பணவீக்கம் சீரான நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.உலகநாடுகள் இந்திய பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்கள் மீது நம்பிக்கைகொண்டுள்ளன. பொருளாதாரம் வலுப் பெற மேலும் பல்வேறு சீர்திருத்தநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்றுதினங்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும்.

கடந்த சில தினங்களாக இந்தியரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி பெரும் கவலையளிக்கிறது. ஆனால் இதுதற்காலிகம் தான். ரூபாய் வீழ்ச்சியை கண்டு முதலீட்டாளர்கள் கவலைப்படவேண்டாம். விரைவில் இது சரியாகி ரூபாயின் மதிப்பில் எழுச்சி காணப்படும்.முதலீட்டாளர்களின் நம்பிக்கை தான் மிக முக்கியம்.

கடந்தாண்டைகாட்டிலும் நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம்கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு, சமையல் எரிவாயு விலைநிர்ணயம் மற்றும் நேரடி அந்நிய முதலீட்டில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதுமகிழ்ச்சியளிக்கிறது. அந்நிய முதலீடு தொடர்பாக சந்திரசேகர் கொடுத்தஅறிக்கை திருப்தியளிக்கிறது.

இதுதொடர்பாக மத்திய நிதி வாரியம் (செபி) ஜூன் 25ம் தேதி ஆலோச‌னைசெய்ய உள்ளது.