Home உலகம் ஊழல் புகாரினால் பதவி இழக்கும் செக்கோஸ்லோவாக்கிய பிரதமர்

ஊழல் புகாரினால் பதவி இழக்கும் செக்கோஸ்லோவாக்கிய பிரதமர்

404
0
SHARE
Ad

பிராக்  ஜூன் 17- உறவினர் ஒருவரின் ஊழல் மற்றும் அவதூறு மோசடிகளால் எழுந்த பிரச்சினைகளில் செக்கோஸ்லாவாகியப் பிரதமர் பெடர் நேகாஸ் (படம்) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Petr Necasஅந்நாட்டு அரசியல் அமைப்பின்படி, அரசின் அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாற்று அரசு அமைப்பதில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி மற்றும் அந்நாட்டு அதிபர் ஆகியோரிடையே குதிரை பேரத்திற்கும் இது வழிவகுக்கும். பிரதமரின் உறவினரும், அவரது அலுவலக நிர்வாகியுமான ஜனா நக்யோவா பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களிடையே உளவு பார்க்கும் வேளையில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

#TamilSchoolmychoice

பிரதமர் விவாகரத்து செய்ய இருக்கும் அவரது மனைவியையே உளவு பார்த்ததாக அவரது வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பிரதமர் மறுத்தபோதிலும், இதனால் பெருகத் தொடங்கிய விவாதங்களின் விளைவாக அவரது சக உறுப்பினர்களே அவரை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, சனிக்கிழமை அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டார். தன்னுடைய அமைச்சரவை புதிய தலைமையின் கீழ் அடுத்த தேர்தல் வரும் வரை ஆட்சியில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த எண்ணத்திற்கு அவரது உறுப்பினர்களோ, அதிபர் மிலோஸ் ஜேமேனோ ஆதரவு அளிப்பார்களா என்பது தெரியவில்லை.