Home இந்தியா தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு!

431
0
SHARE
Ad

Dr-Ramadoss-Sliderசென்னை, ஜூன் 22 – தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களின் தேர்தலைப் புறக்கணிக்க தாங்கள் முடிவு செய்திருப்பதாக டாக்டர் ராமதாஸ் (படம்) தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தமிழக சட்டப் பேரவையில் பா.ம.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு பா.ம.க. ஆதரவு தெரிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவை பா.ம.க. எடுத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமைநடைபெற்ற பா.ம.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்நிறைவேற்றபட்டது. கூட்டத்துக்கு பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணிராமதாஸ் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

புறக்கணிப்பு முடிவு ஏன்?

கடந்த 2011 ஜூன் 27-ல் நடைபெற்ற பாமகவின்பொதுக்குழுவில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ கூட்டணிஅமைப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படிபோட்டியிடும் சில கட்சிகள் பாமகவிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், தனித்துப்போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும்படி பாமக நிர்வாகக் குழுகூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதே உணர்வே செயற்குழுகூட்டத்திலும் வெளிப்பட்டது.

அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.