Home இந்தியா பட்டாசு வெடித்து உற்சாகம் வேளாங்கண்ணி, சென்னை ரயில் சேவை தொடங்கியது

பட்டாசு வெடித்து உற்சாகம் வேளாங்கண்ணி, சென்னை ரயில் சேவை தொடங்கியது

600
0
SHARE
Ad

நாகை, ஜூன் 24- நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ரயில் நிலையத் தில் வேளாங்கண்ணி சென்னை புதிய இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

வெலகன்னிவிழாவையொட்டி வேளாங்கண்ணி, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சென்னை, காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைக்கப்பட்டு இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயிலாக இயங்கும்.

இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாகை, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்துவர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் இரவு 11.15க்கு புறப்பட்டு காலை 7.45க்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.

#TamilSchoolmychoice

விழாவிற்கு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தலைமை வகித்தார். ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி வேளாங்கண்ணி, சென்னை இணைப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரவு 8.45க்கு வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர்.