Home நாடு அல்தான்துயா கொலை வழக்கு: சிருல், அசிலாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று தொடக்கம்

அல்தான்துயா கொலை வழக்கு: சிருல், அசிலாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று தொடக்கம்

443
0
SHARE
Ad

altantuyaகோலாலம்பூர், ஜூன் 24 – மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது.

இவ்வழக்கு விசாரணைக் குழுவிற்கு, பொதுத் துணை சட்ட ஆலோசகர் (III) துன் அப்துல் மஸ்ஜித் ஹம்சா தலைமை வகிக்கிறார். இக்குழுவுடன் டி.பி.பி. மனோஜ் குருப் மற்றும் நூரின் படாருடின் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

சிருல் சார்பாக கமாருல் ஹிசாம் கமாருதீன், அகமட் ஸைடி ஸைனால் மற்றும் ஹஸ்னால் ரெஸுவா மெரிக்கன் ஆகியோர் பிரதிநிதிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நீதிபதி முகமட் அபாண்டி அலி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இவ்வழக்கை விசாரணை செய்யவுள்ளது.

மேலும் மற்ற இரு குழுவில் நீதிபதி லிண்டன் அல்பர்ட் மற்றும் தெங்கு மைமூன் துவான் மாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முகமட் அபாண்டி அலி முன்பு கிளந்தான் அம்னோ பொருளாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.