Home அரசியல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் போராட்டம்- செகுபார்ட் உட்பட 26 பேர் கைது!

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் போராட்டம்- செகுபார்ட் உட்பட 26 பேர் கைது!

568
0
SHARE
Ad

students2-300x175கோலாலம்பூர், ஜூன் 24 – பாடாங் மெர்போக் திடலில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்கட்சியைச் சேர்ந்த போராட்டவாதிகள், மீண்டும் இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அவர்களில் 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Solidariti Anak Muda Malaysia (Samm)  மற்றும் Anything But Umno (ABU) ஆகிய அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போராட்டவாதிகள், இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் ஒன்று கூடி,தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினரையும் மீறி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, காலை 11.10 மணியளவில்  மாணவப் போராட்டவாதி முகமட் சாபுவான் அனாங் உட்பட 26 போராட்டவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களில் மாணவப் போராட்டவாதி ஆடாம் அட்லி மற்றும் பத்ருல் ஹிஷாம் (செகுபார்ட்) உட்பட 8 பேர் தானாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்தனர்.

மீதமுள்ள 50 பேர் காவல்துறையினரின் உத்தரவின் பேரில் மதியம் 12.20 மணியளவில் கலைந்து சென்றனர். அவர்கள் மீண்டும் பாடாங் மெர்போக் திடலுக்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.