Home கலை உலகம் அமீருக்கு ஜோடியான சசியின் நாயகி

அமீருக்கு ஜோடியான சசியின் நாயகி

622
0
SHARE
Ad

ஜூலை 1- ‘யோகி’ படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் வரும் படம் ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’.

அரசியல் கலந்த நகைச்சுவை  படமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமியிடம் பணிபுரிந்த சந்திரன் இயக்குகிறார். அமீரின் உதவி இயக்குனரான ஆதாம் பாலா தயாரிக்கிறார்.

மிர்திகாஇப்படத்தில் அமீருக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆனால் யாரும் ஒப்புக் கொள்ளாததால் இறுதியில் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் நடித்த சுர்வினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால், அவரோ, நடிகர் அர்ஜுனின் ‘ஜெய்ஹிந்த்-2’ படத்தில் ஒப்பந்தமாகிவிட்டதால் அமீருடன் நடிப்பதை கைகழுவி விட்டாராம்.

இந்நிலையில் இயக்குனர் சசியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘555’ படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான மிர்த்திகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

நாயகி தேர்வு முடிந்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.