Home நாடு ஆர்.சி.ஐ விசாரணை: “நான் வைத்திருப்பது போலி அடையாள அட்டையா?” – இந்தோனேசியர் ஒருவர் அதிர்ச்சி

ஆர்.சி.ஐ விசாரணை: “நான் வைத்திருப்பது போலி அடையாள அட்டையா?” – இந்தோனேசியர் ஒருவர் அதிர்ச்சி

447
0
SHARE
Ad

rci

சபா, ஜூலை 4 –  சபாவில் கள்ளக்குடியேறிகள் மீதான ஆர்.சி.ஐ விசாரணையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் தான் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்று தெரிந்ததும் அதிர்ந்து போனார்.

இஷாக் உஸ்லுவான் (வயது 46) என்ற நபர் இந்தோனேசியாவிலுள்ள தீமோரில் பிறந்தவர். கடந்த 1983 ஆம் ஆண்டு சபா மாநிலத்திற்கு வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று கோத்தாகினபாலுவிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் நடந்த விசாரணையில் சாட்சியமளிக்க வந்த இஷாக்கிடம், விசாரணை அதிகாரிகள்,  நீங்கள் வைத்திருப்பது பதிவு செய்யப்படாத போலியான அடையாள அட்டை என்று கூறியதும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

“நாங்கள் உங்கள் அடையாள அட்டையை சோதனை செய்தோம். அதில் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. உங்களை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள்” என்று விசாரணை அதிகாரி ஜமில் அரிபின் கூறினார்.

அதன் பின்னர் இஷாக்கின் அடையாள அட்டை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், புதிய இந்தோனேசிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) மற்றும் பிற ஆவணங்களைப் பெற இந்தோனேசிய தூதரகத்தின் உதவியை நாடும் படி இஷாக்கிற்கு அதிகாரிகள் ஆலோசனை கூறினார்.

தற்போது இஷாக்கிடம் எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.