Home நாடு “அவசரகால சட்டம் கட்டாயம் தேவை என்பதற்கான புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்” – சாஹிட்

“அவசரகால சட்டம் கட்டாயம் தேவை என்பதற்கான புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்” – சாஹிட்

529
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர், ஜூலை 11 – அவசரகால சட்டம்  (Emergency Ordinance) மீண்டும் தேவை என்பதில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி மிகவும் உறுதியாக இருக்கிறார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டது தான் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்ததற்கான காரணம் என்றும் அவர் கருதுகிறார்.

இதை உண்மை என்று நிரூபிக்க அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குற்றச்செயல்கள் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சாஹிட் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2012 ஆம் ஆண்டு அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு தான் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. சிலாங்கூரில் நடக்கும் 90 விழுக்காடு குற்றச்செயல்களுக்குக் காரணம், அவசரகால சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் குற்றவாளிகள் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும்,  “வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தில், அது குறித்த ஆய்வு முடிவுகளையும், புள்ளிவிவரங்களையும் நான் சமர்ப்பிப்பேன்” என்றும் சாஹிட் கூறியுள்ளார்.

ஆனால், பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, கடந்த ஜூலை 9 ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில், அவசரகால சட்டம் நீக்கப்படுவதற்கு முன்னரே, நாட்டில் குற்றச் செயல்களின் விகிதம் அதிகரித்திருந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.