Home கலை உலகம் பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வாலி காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வாலி காலமானார்.

645
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 18- பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி (வயது 81) உடல நலக் குறைவால் இன்று காலமானார்.

Vaali-Featureநுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.