Home வணிகம்/தொழில் நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகத் தொடர்பு கருவியாக ‘ஐபோன்’ முன்னணி வகிக்கின்றது – கருத்துக் கணிப்பு

அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகத் தொடர்பு கருவியாக ‘ஐபோன்’ முன்னணி வகிக்கின்றது – கருத்துக் கணிப்பு

512
0
SHARE
Ad

iPhone-Featureஜூலை 27 – சமூக வலைத் தள தொடர்பாளர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கருவி எது என்பதைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட ஆய்வில் ஐபோன் கைத்தொலைபேசியே முன்னணி வகிப்பது தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

மேசைக் கணினி வகைகளை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் ஐபோன் வழியான வலைத் தொடர்புகளும், பகிர்வுகளும் மேற்கொள்ளப்படுவது ஆய்வின் வழி தெரியவந்துள்ளது. மற்ற எல்லா வகை கையடக்கக் கருவிகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக பகிர்வுகளுக்காக ஐபோன் பயன்படுத்தப்படுகின்றது என்பதும் தெரிய வந்துள்ளது.

சுமார் 2.4 மில்லியன் வலைத் தளங்களைஆராய்ந்து “ஷேர் திஸ்” (ShareThis) என்ற வலைத்தள உள்ளடக்க பகிர்வுகளுக்கான ஆய்வு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கைத்தொலைபேசி வழியான சுமார் 1.2 பில்லியன் சமூக வலைத் தள சமிக்ஞை குறியீடுகளை வைத்து ஆராய்ந்ததில், ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துபவர்களில் 12.4 சதவீதத்தினர் அதிகமான அளவில் வலைத்தள உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் அண்ட்ரோய்ட்  கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களும் (7.4 சதவீதம்), மூன்றாவதாக பிளாக் பெர்ரி கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களும் (6.3 சதவீதம்) இருக்கின்றனர்.

மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்ட வலைத்தள உள்ளடக்கங்களில் 60 சதவீதம் ஃபேஸ் புக் எனப்படும் முகநூல் சம்பந்தப்பட்டதாகும். இரண்டாவதாக ட்விட்டர் சமூக வலைத் தளம் திகழ்கின்றது.

மேசைக் கணினிகளில் மேக் எனப்படும் ஆப்பிள் நிறுவன மேசைக் கணினிதான் சமூக வலைத் தள பகிர்வுகளில் முன்னணி வகிக்கின்றது. இதன் மூலம் 5 சதவீத பயனீட்டாளர்கள் பகிர்வுகளைச் செய்து கொள்ள மற்ற மேசைக் கணினி பயனீட்டாளர்களில் 3.9 சதவீதத்தினர் பகிர்வுகளைச் செய்து கொள்கின்றனர்.

கைத்தொலைபேசிகளின் வழி சுவாரசியமான தகவல்களை அதிகமானோர் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், இணையம் வழி பொருட்களை வாங்குபவர்களில் அதிகமானோர் மேசைக் கணினிகளையே பயன்படுத்துகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.