Home நாடு இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவி! இந்திய தூதரகம் அறிவிப்பு!

இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவி! இந்திய தூதரகம் அறிவிப்பு!

645
0
SHARE
Ad

Indian Embaasyy1கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – மலேசியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பல தொழில் நுணுக்கக் கல்வியகங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ‘இந்திய கல்வி நிதி மற்றும் அறவாரிய அமைப்பு (ஐ.எஸ்.டி.எப்) நிதி உதவி அறிவித்திருக்கிறது என இந்தியத் தூதரகத்தின் கல்விப்பகுதி ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

2013 – 2014 ஆம் கல்வி ஆண்டுக்கான நிதி உதவி பெற மேற்கண்ட ஐ.எஸ்.டி.எப் அமைப்பு விண்ணப்பாரங்களை வரவேற்கிறது என அது கூறியுள்ளது.

இந்த நிதி உதவி கல்விக்கான முழுச்செலவுத் தொகையையும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் மேலதிகச் செலவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பதையும் கவனத்தில் கொள்ளும்படி அது கேட்டுக்கொள்கிறது.

#TamilSchoolmychoice

விண்ணப்ப பாரங்களை இந்தியத் தூதரக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்திய தூதரகத்தின் கல்விப் பிரிவிடமிருந்தும் விண்ணப்பபாரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதிகள்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பல் தொழில் நுணுக்கக் கல்வியகங்களில் படித்துக் கொண்டிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மாஸ்டர்ஸ் பட்டப்படிப்புக்குப் படிப்போர் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. அதே போல், இதற்கு முன்னர் ஐ.எஸ்.டி.எப் பில் நிதி உதவி பெற்றுள்ளோர் இதற்கு மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த உதவி நிதியைப் பெற முடியும்.

முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க செப்டம்பர் 6, 2013 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அந்த நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே நிதி உதவி அளிக்கப்படும். மேற்கண்டவாறு இந்தியத் தூதரகத்தின் கல்விப் பகுதி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் தகவல்களைப் பெற Indian High Commission of India, (Education Wing), Level 28, Menara 1 Mon’t Kiara, No.1, Jalan Kiara, Mon’t Kiara, 50480 Kuala Lumpur. Tel 03-62052350 ext 203) என்ற இந்திய தூதரக முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது <www.indianhighcommission.com.my/istf.html> என்ற இணைய தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.