Home நாடு சின் வூ சீனப்பள்ளி நிலம் விவகாரம்: “என்னுடன் சண்டையிட்டால் கொன்றுவிடுவேன்” – நஸ்ரி எச்சரிக்கை

சின் வூ சீனப்பள்ளி நிலம் விவகாரம்: “என்னுடன் சண்டையிட்டால் கொன்றுவிடுவேன்” – நஸ்ரி எச்சரிக்கை

534
0
SHARE
Ad

1d570005d3943887dd699a06910446cd_XLகோலாலம்பூர், அக் 22 – தலைநகர் புடுராயா பகுதியில் உள்ள எஸ்ஜேகே சின் வூ என்ற சீனப் பள்ளி அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அதை அவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஸீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நஸ்ரி, “நீங்கள் என்னோடு சண்டையிட்டால், நானும் சண்டையிடுவேன். உங்களைக் கொல்லுவேன். என்னோடு போட்டியிடாதீர்கள். நிலத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுங்கள். அது அரசாங்கத்தின் நிலம். என்னுடைய நிலம்” என்று ஆத்திரத்தோடு கூறினார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான அந்த நிலத்தில் சம்பந்தப்பட்ட சீனப் பள்ளி, கடந்த 30 ஆண்டுகளுக்களுக்கு முன்னர் கூடைப்பந்தாட்ட மைதானத்தை அமைத்ததாக நஸ்ரி குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த பள்ளி முதலில் அது அரசாங்கத்தின் நிலம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும், அதன் பிறகு அதற்குத் தேவையான தீர்வை தான் எடுப்பதாகவும் நஸ்ரி தெரிவித்தார்.

“என்னை வந்து சந்தியுங்கள். பிறகு என்னிடம், “மன்னிக்கவும். நாங்கள் அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கார் நிறுத்துமிடமாகப் பயன்படுத்திவருகின்றோம்” என்று கூறுங்கள். நான் உங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு வாடகைக்கு தருகின்றேன். நாங்கள் சுமூகத் தீர்வு காணத் தயார். நான் நியாயமில்லாமல் நடந்து கொள்ளவில்லை” என்று நஸ்ரி குறிப்பிட்டார்.