Home நாடு செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு!

செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு!

549
0
SHARE
Ad

IMG_5807கோலாலம்பூர், நவ 14 – தலைப்பைப் படித்தவுடன் பழைய செய்தியோ என்று குழப்பமடைய வேண்டாம். புதிய செய்தி தான்.

செர்டாங் மருத்துவமனையின் ஒரு பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் இன்று நான்காவது முறையாக மேற்கூரை சரிந்துள்ளது என மலேசியாகினி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முறை, புதிதாகப் பிறந்துள்ள சிசுக்களைப் பாதுகாக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்டி ஆவாங் கூறுகையில், “இன்று அதிகாலை 1.30 மணியளவில், சுமார் 8 முதல் 10 அடி அகலத்திற்கு சரிவு நிகழ்ந்தது” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, பிரசவப் பிரிவின் ஒரு பகுதியின் மேற்கூரை சரிந்தது. இனி ஒரு முறை சரிவு ஏற்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது குரல்கள் எழுந்தன.

அதற்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு சரிந்தது.

அதே போல், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையின் ஒரு பகுதி தனியாகப் பிரிந்து வந்தது. அதற்காக 800,000 ரிங்கிட் செலவில் விரிசல் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.