Home உலகம் மக்கள் புரட்சி வன்முறையாக மாறியது தாய்லாந்தில் 5 பேர் பலி; 45 பேர் படுகாயம்

மக்கள் புரட்சி வன்முறையாக மாறியது தாய்லாந்தில் 5 பேர் பலி; 45 பேர் படுகாயம்

475
0
SHARE
Ad

Tamil-Daily-News_16490900517

பாங்காக், டிசம்பர் 2, தாய்லாந்து நாட்டில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக்சின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக், தற்போது தாய்லாந்து பிரதமராக உள்ளார்.தற்போதைய ஆட்சி தக்சின் ஷினவத்ராவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சகோதரனின் கைப்பாவையாக உள்ள யிங்லக், பதவி விலகக் கோரி ஒரு வாரமாக தலைநகர் பாங்காக்கில் தொடர் போராட்டம் நடக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, கடந்த வாரம் எதிர்க்கட்சியினர் பாங்காக்கில் உள்ள நிதி அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றினர்.மற்ற அமைச்சகங்களையும் கைப்பற்றி அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதையடுத்து, தலைநகர் பாங்காக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதமர் யிங்லக் அவசர நிலை அறிவித்துள்ளார்.இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில், பிரதமர் யிங்லக் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் தோற்றதால் யிங்லக்கின் பிரதமர் பதவி பிழைத்தது.இரண்டு நாட்களுக்கு முன், எதிர்க்கட்சியினர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் நுழைந்து மின் இணைப்பை துண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம், பாங்காக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தை எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டனர். ஆளும் கட்சி ஆதரவு மாணவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் பல்கலைக்கழகத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. 2,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சிக்கி கொண்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மாணவர்களை வெளியேற்றினர். இந்த வன்முறையில், அரசு ஆதரவாளர் ஒருவர் உட்பட  ஐந்து பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

நேற்றைய போராட்டத்தின் ஒரு கட்டமாக, அரசு தொலைக்காட்சி நிலையத்தை எதிர்க்கட்சியினர் கைப்பற்றினர். உள்துறை அமைச்சகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.பிரதமர் அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிடக்கூடிய சூழல் உள்ளதால், பிரதமரின் வீடு மற்றும் அலுவலகங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.