Home வணிகம்/தொழில் நுட்பம் விஜய் மல்லையாவின் நிறுவனத்தில் நெதர்லாந்தின் ஹெனிகென் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது!

விஜய் மல்லையாவின் நிறுவனத்தில் நெதர்லாந்தின் ஹெனிகென் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது!

401
0
SHARE
Ad

Vijay-Mallyaடிசம்பர் 11 – யுனைடெட் புருவெரிஸ் லிமிடெட் (United Breweries Ltd) என்பது இந்தியாவின் மிகப் பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று. இதன் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்த விஜய் மல்லையா (படம்).

#TamilSchoolmychoice

கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்து அதனால் பெரும் நஷ்டத்தை அடைந்த விஜய் மல்லையா தனது செல்வ வளத்தில் தொடர்ந்து சரிவைக் கண்டார். அவரது கிங் ஃபிஷர் நிறுவனமும் தற்போது முடக்கப்பட்டு விட்டது.

இருப்பினும், மதுபானத் தயாரிப்பில் அவரது நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. தற்போது நெதர்லாந்தின் ஹெனிகென் மதுபான நிறுவனம் விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவெரிஸ் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய மதுபானத் தயாரிப்பு நிறுவனமான ஹெனிகென், அதே பெயரிலான புகழ்பெற்ற பீர் வகைகளைக் தயாரித்து விற்பனை செய்கின்றது. தொடர்ந்து இந்தியாவின் யுனைடெட் புருவெரிஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வந்த ஹெனிகென் தற்போது 38.7 சதவீதப் பங்குகளை அந்த நிறுவனத்தில் கொண்டிருக்கின்றது.

ஆனால் விஜய் மல்லையா தற்போது 37.4 சதவீதப் பங்குகளை மட்டுமே தனது நிறுவனத்தில் வைத்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக ஹெனிகென் திகழ்கின்றது.

இந்தியாவிலேயே அதிக அளவில் விற்பனையாகும் கிங் ஃபிஷர் என்ற பெயரிலான பீர் பானத்தையும் லண்டன் பில்ஸ்னர் மற்றும் கல்யாணி பிளேக் லேபல் ஆகிய பெயர்களைக் கொண்ட பீர் வகைகளையும் விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவெரிஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கின்றது.

ஹெனிகென் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் ஹெனிகென் பீர் வகைகளை தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.