Home வணிகம்/தொழில் நுட்பம் 5.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி!

5.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி!

627
0
SHARE
Ad

Gold-sliderடிசம்பர் 16 – பல்வேறு பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்வதில் முன்னணி வணிக நாடாக இருக்கும் மலேசியாவிலிருந்து தங்க நகைகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு 4.63 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய தங்க நகைகளை ஏற்றுமதி செய்த மலேசியா இந்த ஆண்டு 5.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய தங்க நகைகளை ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கு தங்க நகை வணிகர்கள் சங்க ஆலோசகர் ஜோசன் கோர் தெரிவித்துள்ளார்.

இந்த உயர்வுக்கான காரணம் கடந்த ஆண்டு ஜூன் 2013இல் ஒரு அவுன்ஸ்  1,400 அமெரிக்க டாலராக இருந்த தங்க விலை தற்போது சரிந்து ஒரு அவுன்ஸ் 1,240 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுவதாகவும் இதனால் வெளிநாடுகளில் தங்க நகைகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகத் தேவையால் உள்நாட்டிலிருந்து தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதும் அதிகரித்து உள்ளதாகவும் ஜோசன் கோர் கூறியுள்ளார்.

மலேசியாவிலிருந்து அதிக அளவில் தங்க நகைகளை வாங்கும் நாடுகளாக ஹாங்காங், இந்தியா, மத்திய கிழக்கு நாடான யுனைட் அராப் எமிரேட்ஸ் ஆகியவை திகழ்கின்றன.

இந்த நாடுகள் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் தங்க நகைகளை மலேசியாவில் இருந்து வாங்கி வருகின்றன.

தங்கவிலை வீழ்ச்சியுற்றாலும், உள்நாட்டில் பயனீட்டாளர்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் உள்நாட்டு தங்க நகைகளின் விற்பனை சற்றே குறைந்திருப்பதாகவும் ஜோசன் கோர் கூறியுள்ளார். பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தங்க நகைகள் இறக்குமதி செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ள வணிகப் போட்டியும் உள்நாட்டு தங்க நகை விற்பனையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும் என்றும் ஜோசன் தெரிவித்துள்ளார்.