Home நாடு ‘துருன்’அமைப்பின் தலைவர் அஸான் கைது!

‘துருன்’அமைப்பின் தலைவர் அஸான் கைது!

760
0
SHARE
Ad

1-azanகோலாலம்பூர், டிச 24 – விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டணங்கள் உயர்வு போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்த காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (Gamis), ஒரு என்ஜிஓ-வான துருன் (Turun) ஆகியவற்றின் தலைவரான முகமட் அஸான் சாபர் (படம்) நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

புத்தாண்டுக்கு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்டனக் கூட்டம் குறித்து விசாரணை நடத்த அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமைதிப்பேரணி சட்டம் பிரிவு 9 (5) மற்றும் குற்றப்புலனாய்வு சட்டம் பிரிவு 124C ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அஸானை, 7 நாள் காவலில் வைக்க கோரப்பட்ட மனுவை  நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

#TamilSchoolmychoice

அதன்படி, இன்று நள்ளிரவில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பத்திரிக்கைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அஸானின் கைது குறித்து மற்றொரு அரசு சார்பற்ற இயக்கமான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (SAMM) கண்டனம் தெரிவித்துள்ளது.

“அவரிடமிருந்து தகவல் பெறுவதாக இருந்தால் காவல்நிலையத்திற்கு அல்லவா வரச்சொல்லி இருக்க வேண்டும். ஆனால் கைது செய்தது ஏன்?” என்று அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷேக் யாசிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு, விலைவாசி உயர்வுக்கு எதிராக அஸான் போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.