Home இந்தியா பிரதமர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை: மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு !

பிரதமர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை: மன்மோகன்சிங் திடீர் அறிவிப்பு !

814
0
SHARE
Ad

Manmohan-Singh-Pardaphash-82750

புதுடெல்லி, டிசம்பர்  27– ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30–ந்தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 1–ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.

காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2–வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை அறிவித்து உள்ளது. இதுவரை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தது கிடையாது.

தேர்தல் முடிந்த பின்பு சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில்தான் பிரதமர் முடிவு செய்யப்படுவார். ஆனால் இந்த வழக்கத்தை மீறி முதல் முறையாக பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளது.

காங்கிரசில் சோனியாவுக்குப் பின் ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி அளித்து முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார். பாரதீய ஜனதா போல் நாமும் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜனவரி மாதம் 17–ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

இதற்காக கூட்டத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக மூத்த தலைவர்களின் கையெழுத்து திரட்டப்பட்டு வருகிறது.

காங்கிரசில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சரியாக நேரத்தில் அறிவிப்போம் என்று சோனியாகாந்தி கூறியிருந்தார். எனவே இந்த செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

ராகுல்காந்திக்கு வழிவிடும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் சோனியாகாந்தியும், மன் மோகன்சிங்கும் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்று 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்தால் நான் பிரதமர் ஆக மாட்டேன். எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று உறுதிபட தெரிவித்து விட்டதாக கூறினார்.

10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்து விட்டேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார். இருப்பினும், கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்துவேன். ராகுல் காந்திக்கு வழிகாட்டியாக செயல்படுவேன் என்றும் மன்மோகன்சிங் தனது விருப்பத்தை சோனியாவிடம் தெரிவித்து விட்டார். இதனால்தான் காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்து இருக்கிறது.

மறைந்த இந்திராகாந்திக்குப் பின் 10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை மன்மோகன்சிங் பெறுகிறார்.