Home வணிகம்/தொழில் நுட்பம் பணக்காரர் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்

பணக்காரர் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்

442
0
SHARE
Ad

bill-GATES

கோலாலம்பூர், ஜன 7- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ், பணக்காரர் தரவசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

புளும்பெர்க் நிறுவனம்,2013ம் ஆண்டின், 300 பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதில், பில்கேட்சின் கடந்தாண்டின் சொத்து மதிப்பு 1,580 கோடி டொலர் அதிகரித்து, 7,850 கோடி டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற மே மாதம் வெளியான பட்டியலில், பில்கேட்ஸ், மெக்சிகன் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம்மை பின்னுக்கு தள்ளி, உலகின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவன பங்கின் விலை, 40 சதவீதம் அதிகரித்ததன் மூலம், பில்கேட்ஸ் மேலும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.

அது மட்டுமின்றி, பில்கேட்ஸ் வைத்துள்ள, 35 பொது மற்றும் தனியார் துறை நிறுவனப் பங்குகளின் விலை உயர்வாலும், சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பில்கேட்சின் மொத்த சொத்தில் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகளின் மதிப்பு 25 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.