Home நாடு அன்வாரின் முடிவு குறித்து பக்காத்தான் தலைவர்களுள் குழப்பம்!

அன்வாரின் முடிவு குறித்து பக்காத்தான் தலைவர்களுள் குழப்பம்!

445
0
SHARE
Ad

Lim Guan Engபெட்டாலிங் ஜெயா, ஜன 28 – காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிடவிருப்பது குறித்து பக்காத்தான் தலைவர்களுள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றது.

சிலர் சிலாங்கூரில் என்ன நடக்கிறது என்றே தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் அன்வாரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறுகையில், சிலாங்கூரில் நடப்பவை குறித்து தனக்கு தகவல் எதுவும் வரவில்லை என்று கூறிய அவர், எதுவாக இருந்தாலும் ஊடகங்கள் நேரடியாக அன்வாரிடமே கேட்டுக்கொள்ளும் படி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“தற்போது எனக்கு இந்த விவகாரம் முக்கியமல்ல. தேவாலய வளாகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து பினாங்கு மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுப்பதில் தான் எனது முழு கவனம் உள்ளது” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு பினாங்கு தேவாலய வளாகத்துக்குள் அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் குண்டுகள் வீசியதில் தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இடைதேர்தல் என்பது விளையாட்டு அல்ல 

இதனிடையே, பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினர் நஸ்ருதீன் ஹஸ்ஸான் தந்தாவி, இடைத்தேர்தல் குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிபடுத்தியுள்ளார். மேலும் பக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளிடையே இது குறித்து கலந்தாலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“யாரை வேண்டுமானாலும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து, இடைதேர்தல் நடத்துவது என்பது விளையாட்டு போல் ஆகிவிட்டது. இடைத்தேர்தல் என்பது அதிகாரத்தை சோதித்துப் பார்ப்பதற்காக அல்ல” என்று தனது பேஸ்புக் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.