Home நாடு பக்காத்தான் பேசுவது குழந்தைத்தனமாக உள்ளது – சிலாங்கூர் மசீச

பக்காத்தான் பேசுவது குழந்தைத்தனமாக உள்ளது – சிலாங்கூர் மசீச

821
0
SHARE
Ad

donaldlim400pxபெட்டாலிங் ஜெயா, பிப் 12 – சிலாங்கூரின் நன்மைக்காக தான் காஜாங் இடைத்தேர்தல் உருவாக்கப்பட்டது என்று பக்காத்தான் கூறுவதை மசீச கடுமையாக விமர்சித்துள்ளது.

சிலாங்கூர் மாநில மசீச துணைத்தலைவர் டத்தோ டோனால்ட் லிம், இது ஒரு  ‘அபத்தமான மற்றும் குழந்தைத்தனமான’ பேச்சு என்று வர்ணித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பக்காத்தானின் சொந்த பிரச்சனைகளுக்காக வேண்டுமென்றே இந்த இடைத்தேர்தல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுநிதி தான் வீணாகிறது.” என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மக்களுடைய ஏமாற்றத்தை திசை திருப்ப, சிலாங்கூரில் அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் நிலை குறித்து பிகேஆரும், பக்காத்தானும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர் என்றும் லிம் தெரிவித்தார்.

காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்தது பக்காத்தானின் ஒற்றுமையை காட்டுகிறது என்றால், சிலாங்கூரின் வளர்ச்சியில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், பக்காத்தானின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் லிம் தெரிவித்தார்.

காஜாங் இடைத்தேர்தல் மூலம் பக்காத்தான் இன்னும் வலுவுடையதாகும், அதன் மூலம் புத்ரஜெயாவை எளிதில் கைப்பற்ற முடியும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் மற்றும் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகியோர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.