Home நாடு ‘மேன் நம்பிலாஸ்ட்’ ன் விசாரணையை கவனிக்க தனிக்குழு – சிவராஜா உறுதி

‘மேன் நம்பிலாஸ்ட்’ ன் விசாரணையை கவனிக்க தனிக்குழு – சிவராஜா உறுதி

487
0
SHARE
Ad

tmi-sivarraajh-nov26_300_274_100கோலாலம்பூர், பிப் 13 – தைப்பூச விழாவில் சர்ச்சைக்குரிய கருத்து இட்டு அண்மையில் கைது செய்யப்பட்ட இரு பேஸ்புக் வலைப்பதிவாளர்களின் காவல்துறை விசாரணயை கவனிக்க ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா ஒரு தனிக்குழுவை அமைப்பதாக நேற்று உறுதியளித்தார்.

ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவராஜா, “இவ்விவகாரத்தில் பொதுமக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் ஆர்.தினாலன் இந்த குழுவிற்கு தலைமை வகிப்பார். இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்துரைத்த ‘மேன் நம்பிலாஸ்ட்’ ( Man Namblast) மற்றும் முகமட் ஹிட்யாட் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறைக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ‘மேன் நம்பிலாஸ்ட்’ என்பவர் கைது செய்யப்பட்டதை தேசிய காவல்துறைத் தலைவர் காலித் அபு பக்கார் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் என்பதையும் சிவாராஜா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேன் நம்பிலாஸ்ட் (அவரது உண்மையான பெயர் அல்ல) என்பவர் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பத்துமலையில் நடந்த தைப்பூச விழா குறித்து இழிவாகக் கருத்துரைத்திருந்தார். அதில் அவர் “Berpuluh ribu syaitan sedang berarak menaiki Bt Caves” என்று கூறியிருந்தார்.

அதாவது, “பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேய்கள் பத்துமலை படிகளில் ஏறுகின்றன” என்று நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற இந்து சமய மக்களை இழிவு படுத்தும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவாக கருத்துரைத்திருந்த முகமட் ஹிட்யாட் என்ற பள்ளி ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்துக்களின் சார்பாக தாங்கள் வேண்டுகோள் விடுப்பதாக சிவராஜா நேற்று குறிப்பிட்டார்.

அத்துடன் கல்வித்துறை, சம்பந்தப்பட்ட நபரின் மீது விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.