Home தொழில் நுட்பம் ஏசர் லிக்விட் E3, லிக்விட் Z4 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியீடு!

ஏசர் லிக்விட் E3, லிக்விட் Z4 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியீடு!

474
0
SHARE
Ad

Acer-Liquid-E31ஐரோப்பா, பிப் 24 – ஏசர் நிறுவனம் 2014 இல் அதன் லிக்விட்  தொடரில் ஏசர் லிக்விட் E3 மற்றும் ஏசர் லிக்விட் Z4, ​​ஆகிய இரண்டு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

ஏசர் லிக்விட் E3, 199 யூரோக்கள் விலை கொண்ட இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும், மற்றும் ஏசர் லிக்விட் Z4, 99 யூரோக்கள் விலை கொண்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த இரண்டு லிக்விட் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய சந்தையில் கிடைக்கும்.

#TamilSchoolmychoice

இந்த சாதனத்தில் எத்தனை சிம் கார்டு கொண்டிருக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை, ஆனால் லிக்விட் E3யின் படத்தை பார்த்தால் ஒரு சிம் கார்டு கொண்டிருப்பது போல தெரிகின்றது. மேலும் இரண்டு சாதனங்களிலும் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயக்கும்.

ஆனால், லிக்விட் E3 யூசர்ஸ் இந்த ஆண்டுக்குப் பிறகு ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அப்டேட்டை பெறலாம், அதே நேரத்தில் நிறுவனத்தின் லிக்விட் Z4 அப்டேட் பற்றி எந்தவிதமான திட்டங்களும் இல்லை.  இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரேமாதிரியான டிடிஎஸ் சவுண்ட் தொழில்நுட்பம்கொண்டிருக்கின்றன.
ஏசர் லிக்விட் E3:

ஏசர் லிக்விட் E3, 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (அறியப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ரேம் 1GB கொண்டுள்ளது.

லிக்விட் E3 எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் கேமரா, மற்றும் ஃபிளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வருகிறது. இது மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு ஆதரவை கொண்டுள்ளது.

லிக்விட் E3 8.9mm திக்னஸ் கொண்ட 135 கிராம் எடையுடையது. பேட்டரி திறன் மற்றும் டாக்டைம் பற்றி நிறுவனம் விரிவான தகவல்களை வழங்கவில்லை. ஏசர் லிக்விட் E3, 3 ஜி, எட்ஜ், ஜிபிஆர்எஸ், Wi-Fi, ப்ளூடூத், மற்றும் ஒருங்கிணைந்த ஜிபிஎஸ் போன்ற இணைப்பு விருப்பங்கள் கொண்டு வருகின்றன.

ஏசர் லிக்விட் Z4:

ஏசர் லிக்விட் Z4, அறியப்படாத தீர்மானம் கொண்ட 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் (அறியப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஏசர் லிக்விட் Z4 எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது மற்றும் முன் எதிர்கொள்ளும் கேமரா பற்றி விரிவான தகவல்கள் இல்லை.

இது 4GB உள்ளடிக்கிய சேமிப்பு உள்ளது ஆனால், மைக்ரோ SD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய விவரங்கள் பற்றி குறிப்பிடவில்லை. இது 9.7mm திக்னஸ் கொண்ட 130 கிராம் எடையுடையது.

பேட்டரி திறன் மற்றும் டாக்டைம் பற்றி நிறுவனம் விரிவான தகவல்களை வழங்கவில்லை. லிக்விட் Z4 இணைப்பு விருப்பங்கள், 3 ஜி, எட்ஜ், ஜிபிஆர்எஸ், Wi-Fi, ப்ளூடூத், மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும்.