Home நாடு மலாய்காரர்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் – அன்வார்

மலாய்காரர்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் – அன்வார்

581
0
SHARE
Ad

anwar-ibrahim-during-ceramah-300x199காஜாங், மார்ச் 4 – காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஒரு மலாய் இளைஞர்கள் குழுவிடம் இந்துக்களின் புராண நூலான இராமாயணம், மகாபாரதம் மற்றும் திருக்குறள் போன்றவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மலேசியர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள அவர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

“நேற்று ஒரு மலாய் இளைஞர்கள் குழுவை சந்தித்தேன். அவர்களிடம் இந்துக்களின் புராண நூலான இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படிக்குமாறு கூறினேன். அதோடு திருக்குறளையும் படித்துப் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தினேன்” என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்திய சமுதாயம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை திருக்குறள் வரையறுத்துக் கூறுகின்றது” என்றும் அன்வார் விளக்கமளித்தார்.

அதே நேரத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

“நான் ஒரு முஸ்லிம் மற்றும் மலாய் இனத்தவராக இருக்கிறேன். இருந்தும் புதிய மலேசியா மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது.” என்று அன்வார் கூறினார்.

“மலாய்காரர்களின் மனதில் உள்ள பாதுகாப்பற்ற உணர்வை நாம் மாற்ற வேண்டும். மலாய்காரர்கள் இந்த நாட்டை தங்களது போலவும், சீனர்களிடம் எங்கே அடிபணிந்து விடுமோ என்றும் அஞ்சுகிறார்கள். அந்த எண்ணத்தை மாற்றுவது தான் எனது சவால்” என்றும் அன்வார் தெரிவித்தார்.

இதை மலாய்காரர்களின் மனதில் விதைக்க அவர்கள் (தேசிய முன்னணி) தயாராக வேண்டும். மலாய்காரர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டில் நடக்கும் குற்றங்களில் அதிகப்படியாக இந்தியர்கள் ஈடுபடுவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.