Home நாடு இந்த மாதத்திலாவது ம.இ.கா புதிய செனட்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

இந்த மாதத்திலாவது ம.இ.கா புதிய செனட்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

630
0
SHARE
Ad

gvmt_parliamentஏப்ரல் 1 – தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதியோடு நிறைவு பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற மேலவையின் (செனட்) கூட்டம் ஆரம்பமாகின்றது.

#TamilSchoolmychoice

வழக்கமாக புதிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் கூட்டத் தொடரின் முதல் நாளில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற மேலவைக் கூட்டம் தொடங்கும்போது நீண்ட காலமாக காலியாக இருக்கும் ம.இ.கா. சார்பிலான செனட்டர்களின் பதவிப் பிரமாணமும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கின்றது.

தற்போது ம.இ.கா சார்பில் நான்கு செனட்டர்கள் பதவி காலியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. பல மாதங்களாக காலியாக இருக்கும் இந்தப் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதற்குத் தகுந்த காரணங்கள் இதுவரை கூறப்படவில்லை.

பல ம.இ.கா தலைவர்கள் இது குறித்து அறிக்கைகள் விட்டும் ம.இ.கா தலைமையகத்திலிருந்து முறையான விளக்கங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

ஆனால், இந்த முறை நாடாளுமன்ற மேலவையின் கூட்டம் நடைபெறவிருப்பதால், புதிய செனட்டர்கள் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் தேதி கூட்டத் தொடரின் முதல் நாளில் பதவிப் பிரமாணம் எடுப்பார்கள். அதன்படி பார்த்தால் இந்நேரம் ம.இ.காவின் புதிய செனட்டர்களுக்கான நியமனங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

புதிய செனட்டர்களாக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடப் பட்டியலில் கட்சியின் தேசிய உதவித் தலைவர்களான எஸ்.சோதிநாதன், எஸ்.பாலகிருஷ்ணன், மற்றும் சா.வேள்பாரி, எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பேராக் மாநிலத்தின் தலைவர் ஆர்.கணேசன் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.