Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவின் ஷன்டோங் ஏர்லைன்ஸுடன் போயிங் புதிய ஒப்பந்தம்!

சீனாவின் ஷன்டோங் ஏர்லைன்ஸுடன் போயிங் புதிய ஒப்பந்தம்!

441
0
SHARE
Ad

Boeing-737-777-Air-Leaseபெய்ஜிங், ஏப்ரல் 23 – அதிவேகமான சொகுசு விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான போயிங், சீனாவின் ஷன்டோங் ஏர்லைன்ஸிடமிருந்து 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு வர்த்தகத்தைப்  பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் போயிங் நிறுவனம் 50 விமானங்களை சீனாவிற்காக விற்பனை செய்துள்ளதாக அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பெருகி வரும் உள்நாட்டு விமான சேவைகளின் தேவையை முன்னிட்டு சீன நிறுவனம் அதனுடைய விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், இதற்கான அனுமதியை சீன அரசிடம் இன்னும் பெறவில்லை.

#TamilSchoolmychoice

எரிபொருள் திறன் கொண்ட விமானங்களை வாங்க விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால், விமானத் தயாரிப்பாளர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 100-200 இருக்கைகளுடன் குறுகிய திறன் கொண்ட தயாரிப்புகளே வரும் 20 ஆண்டுகளுக்கு 20 டிரில்லியன் விற்பனை வருவாயைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வகை தயாரிப்புகளில் ஏர்பஸ்ஸின் ஏ320யும், போயிங்கின் 737-ம் முன்னணியில் இருக்கின்றன. எனவே இந்த புதிய ஒப்பந்தம் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டால் ஏர்பஸ் நிறுவனம் மட்டுமின்றி சீனாவின் அரசு நிறுவனமான கமர்ஷியல் ஏர்கிராப்ட் நிறுவனத்துக்கும் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

சீனாவின் ஷன்டோங் ஏர்லைன் நிறுவனத்துடனான வர்த்தகத்தை போயிங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஷன்டோங் நிறுவனம், 737-மேக்ஸ்  விமானங்களின் திறமை மீது கொண்டுள்ள ஆர்வம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள போயிங், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக சீன அரசுடனும், விமான நிறுவனத்துடனும் தொடர்ந்து பணி புரிவோம் என்று தெரிவித்துள்ளது.