Home வணிகம்/தொழில் நுட்பம் ப்ரோடோஜியோ ஒய் நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக்!

ப்ரோடோஜியோ ஒய் நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக்!

470
0
SHARE
Ad

acquireசான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 26 – நட்பு ஊடகங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் நிறுவனம், உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ‘மூவ்ஸ்’ (Moves) எனும் செயலியை உருவாக்கிய ‘ப்ரோடோஜியோ ஒய்’ (ProtoGeo Oy) என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது.

இந்த மூவ்ஸ் செயலியை திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்வதன் மூலமாக பயனாளர்கள் தாங்கள் நடக்கும் தூரம் அதன் மூலம் தாங்கள் எரிக்கும் கலோரிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.

பேஸ்புக் நிறுவனம் தனது போட்டியாளரான கூகுள் போன்று தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குவதில்லை. இந்த மூவ்ஸ் செயலியானது, கூகுளின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் கைக்கடிகாரங்களுக்கு இணையாகச் செயல்படும் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் பயனர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு என்று பிரத்யேகமான எந்த கருவிகளையும் வாங்க தேவையில்லை. மூவ்ஸ் செயலியை தங்கள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்வதன் மூலமாக தங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணித்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் நிறுவனம் ப்ரோடோஜியோ ஒய்யை என்ன விலை கொடுத்து வாங்கியது, அவ்விரு நிறுவனங்களுக்கு இடையே நிகழ்ந்துள்ள வர்த்தகப் பரிவர்த்தனைகள் குறித்து அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

பேஸ்புக் நிறுவனம் இந்தாண்டின் தொடக்கத்தில் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ‘வாட்ச் அப்’ (Whats Up) நிறுவனத்தையும், 2.3பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அக்குலஸ் விஆர் ( Oculus VR) நிறுவனத்தையும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.