Home நாடு ஹுடுட் விவகாரத்தினால் மக்கள் கூட்டணிக்கு ஆபத்து இல்லை – அன்வார் இப்ராகிம்

ஹுடுட் விவகாரத்தினால் மக்கள் கூட்டணிக்கு ஆபத்து இல்லை – அன்வார் இப்ராகிம்

490
0
SHARE
Ad

Anwar - EPA 440 x215கோலாலம்பூர், மே 2 – பலரும் எதிர்பார்ப்பதுபோல் ஹுடுட் சட்ட விவகாரத்தால் மக்கள் கூட்டணி என்று அழைக்கப்படும் பக்காத்தான் ராயாட் கூட்டணிக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் இந்த  விவகாரம் குறித்து  மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையில் தொடர்ந்து விவாதம் நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

பாஸ் கட்சிக்கும் ஜசெகவுக்கும் இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கொஞ்ச காலமாகவே இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேற்றுமைகள், கருத்து மோதல்கள்  உள்ளன.

அவர்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து  விவாதம் நடத்த  விட்டு விட வேண்டும் என நான் கருதுகின்றேன். கடந்த செவ்வாய்க்கிழமை இது பற்றி நாங்கள் நீண்ட நேரம் விவாதித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சி கூட்டணியில்  உள்ள மூன்று கட்சிகள் நட்புறவு அடிப்படையில் இந்த விவாதத்தில் ஈடுபட்டன. கருத்து வேறுபாடுகள் இருப்பினும் விவாதம்  சீராகவே நடைபெற்றது என்று அவர் கூறினார்.

இந்த ஹுடுட் விவகாரத்தில் மக்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுமா என அன்வாரிடம் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

ஹுடுட் விவகாரம் தொடர்பில் பாஸ் கட்சியும் ஜசெகவும் சர்ச்சையில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் கூட்டணிக்கு எந்த ஆபத்து வந்து விடாது என்றும் அன்வார் தெரிவித்தார்.

கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மூன்று கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் உறவுகள் சுமுகமாகவே உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.