Home நாடு வாக்களிப்பில் முறைகேடு – 12 தொகுதிகளில் பிகேஆர் தேர்தல் தீடீர் ரத்து

வாக்களிப்பில் முறைகேடு – 12 தொகுதிகளில் பிகேஆர் தேர்தல் தீடீர் ரத்து

579
0
SHARE
Ad

PKR-Logo-Sliderஷா ஆலம், மே 13 – இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள பிகேஆர் கட்சியின் உள்ளமைப்புத் தேர்தல்களில் முக்கிய மாநிலமாக சிலாங்கூர் திகழ்கின்றது.

துணைத் தலைவர் போட்டியில் முன்னணி வகிக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் மற்றும் நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலி இருவரும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இறுதி நேர பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். தேர்தலில் 22 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த 12 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது அக்கட்சியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலாங்கூர் மந்திரி புசாராக இருக்கும் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் பொறுப்பில் இருந்து வரும் கோலசிலாங்கூர் தொகுதியின் தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலசிலாங்கூர், சபாக் பெர்ணம், கிள்ளான், கோத்தாராஜா, ஷா ஆலம், காப்பார், சுங்கை பெசார், சுபாங், உலுலங்காட், உலு சிலாங்கூர், சிப்பாங் மற்றும் செலயாங் ஆகிய 12 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோலசிலாங்கூர் தொகுதியில் பணம் விநியோகிக்கப்பட்டதாகவும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மந்திரி பெசார் காலிட் இதனை மறுத்துள்ளார்.

மற்ற தொகுதிகளிலும் முறைகேடுகள்

இதற்கிடையில் கோத்தாராஜா தொகுதியில் குறிப்பிட்ட ஆடவர் கும்பல் ஒன்று வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்று தரையில் எறிந்ததைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டு அங்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதித் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேசிய நிலையிலான பிகேஆர் மாநாடும் தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.