Home நாடு இந்திராகாந்தியின் பிள்ளைகள் மதமாற்ற விவகாரம் – மே 30ல் தீர்ப்பு

இந்திராகாந்தியின் பிள்ளைகள் மதமாற்ற விவகாரம் – மே 30ல் தீர்ப்பு

593
0
SHARE
Ad

rsz_courthammerஈப்போ, மே 15 – கடந்த 2009 ஆம் ஆண்டு தனது 3 வயது பிள்ளைகளை மதம் மாற்றியதற்காகவும் தன்னுடன் ஒத்துழைக்காததாலும் தன்னுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடக்காததாலும் பத்மாநாபன் என்ற முகமட் ரிட்சுவான் மீது தமக்கு அதிருப்தி ஏற்பட்டதால் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாக பாலர் பள்ளி ஆசிரியையான இந்திராகாந்தி குறிப்பிட்டார்.

தனது 6 வயது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டும் இதுவரை அந்த பிள்ளையை தாயாரிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதால் அவரை சிறையில் அடைக்கக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான வழக்கின் தீர்ப்புக்கு முன், அவரிடம் நீதிமன்றத்திற்கு வரவழைக்கும் ஆணையை ஒப்படைக்க இயலவில்லை. அப்துல்லா நீதிமன்றம் வராவிட்டாலும் தீர்ப்பினை வரும் மே 30ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனது 3 பிள்ளைகளை தாயார் இந்திராகாந்தியின் அனுமதியின்றி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதனிடையே பிரதிவாதி முகமட் ரிட்சுவான் அப்துல்லா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாம் இனி அப்துல்லா சார்பில் வழக்காடுவதில் இருந்து விலகிக் கொண்டார்.

எதிர்வரும் 30 ஆம் தேதி நடைபெறும் இவ்வழக்கில் நேற்று ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு குறித்த அறிக்கையை அப்துல்லாவின் வழக்கறிஞரிடம் வழங்க வேண்டும் என்று இந்திராகாந்தியின் வழக்கறிஞர் குலசேகரன் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை என்பதால் இவருடைய 4 ஆவது வழக்கறிஞர் தாம் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் சார்பாக இனி தாம் வாதடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர் அஸ்முனி சொன்னார்.