Home உலகம் வியட்நாமில் பெரும் கலவரம்:3000 சீனர்கள் வெளியேற்றம்! 

வியட்நாமில் பெரும் கலவரம்:3000 சீனர்கள் வெளியேற்றம்! 

879
0
SHARE
Ad

vietnam-chinaபெய்ஜிங், மே 19 – வியட்நாமில் சீனாவிற்கு எதிராக பெருகிவரும் வரும் கலவரத்தையடுத்து அந்நாட்டிலிருந்து 3 ஆயிரம் சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு சீனக் கடலின் எல்லைப் பிரச்சனைத் தொடர்பாக சீனாவுக்கும், வியாட்நாமுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகின்றது. இந்த நிலையில், வியட்நாமில் சீனா, தைவான், தென்கொரியா உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணை சுத்திகரிப்பு உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றன. அவற்றுக்கு நேற்று முன்தினம் ஒரு கும்பல் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டன. மேலும், பல வெளிநாட்டு நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கிடையே வியட்நாமில் உள்ள சீன எண்ணை கிணற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த கலவரத்தின் காரணமாக எண்ணை கிணறுகளில் பணிபுரியும் 2 சீனர்கள் கொல்லப்பட்டனர், 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

எனவே, அங்கு பணிபுரியும் சீனர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால், தனது நாட்டு மக்களை வியட்நாமில் இருந்து சீன அரசு வெளியேற்றி வருகிறது.

இதுவரை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக 3 ஆயிரம் சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளியேற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.