Home வணிகம்/தொழில் நுட்பம் ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர்! 

ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர்! 

559
0
SHARE
Ad

downloadமே 22 – நட்பு ஊடகங்களில் ஒன்றான ‘டுவிட்டர்’ (Twitter), தனது பயனர்களுக்கு இசை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த சவுண்ட் கிளவுட் நிறுவனமானது ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் செயலியின் மூலமாக பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒலித் துணுக்குகளை  பதிவேற்றம் செய்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியும்.

தற்சமயம் டுவிட்டர் வலைத்தளம் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இதன் போட்டி நிறுவனமான பேஸ்புக் பயனர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து வருவதால் டுவிட்டர், தனது இருப்பை நிலைப்படுத்தத் தீவிர முயற்சியில் இறங்கி வருகின்றது. அதன் முன்னோட்டமாகவே சவுண்ட் கிளவுட் நிறுவனத்துடனான வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைப்பதாக தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அதன் 250 மில்லியன் பயனாளிகளையும் டுவிட்டரில் இணைக்க முடியும். மேலும், இதன் மூலமாக டுவிட்டர் பயனாளிகள், கூகுளில் படங்கள், காணொளிகளை தேடுவதைப்போல, இதில் இசையே தேடி கண்டுபிடிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இருப்பினும், கடந்தாண்டு இதுபோன்ற ஒரு வசதியை அளிக்க முயன்ற டுவிட்டர் அதில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.