Home வாழ் நலம் உடலை பாதுகாக்க சில வழிகள்!

உடலை பாதுகாக்க சில வழிகள்!

1354
0
SHARE
Ad

Low-Residue-Diet-Colonoscopy1மே 23 – நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான். சோற்றுக்கற்றாழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.

தலைமுடி உதிரத் தொடங்குகிறதா… 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது.

பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

#TamilSchoolmychoice

ht2518சின்ன வயதிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள்.

பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு தேக்கரண்டி பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது.

சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சம் சாறு, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது.

75403202 Green Teaபுழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட  களைப்பு நீங்கும்.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது.துளசி இலையை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் நீங்கும்.