Home இந்தியா உ.வே.சா. நினைவு இல்லம் பராமரிக்கப்படவில்லை- கருணாநிதி

உ.வே.சா. நினைவு இல்லம் பராமரிக்கப்படவில்லை- கருணாநிதி

622
0
SHARE
Ad

karunanithiசென்னை, பிப்.18- “தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வின் நினைவு இல்லம் பராமரிக்கப்படாமல் மூடிக் கிடப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,  உ.வே.சா.வின் 159-வது பிறந்த நாள் விழா பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  திருவாரூரில் உள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தற்போதைய ஆட்சியில் முறையான பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது என்றார்.

அந்த இல்லத்தைப் பராமரிக்க ஓர் ஊழியர்கூட இல்லை. அந்த இல்லத்தைப் பராமரிப்பதற்காக இருந்த ஊழியர், பதவி உயர்வு பெற்று ஓசூர் சென்றதில் இருந்து, உ.வே.சா. இல்லம் பூட்டியே கிடக்கிறது. அந்த இல்லத்துக்குப் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசும்போது, “உ.வே.சா. வாழ்ந்த வீடு திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது என்பதால் பராமரிப்பின்றி கிடக்கிறது.

#TamilSchoolmychoice

வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளும், இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்’ என்று கூறுகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆகியும் உ.வே.சா. நினைவு இல்லத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று 2008-ம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உ.வே.சா. நினைவு இல்லப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று கூறி, அதிமுகவினர் அப்போது கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

அதன் பின் திமுக ஆட்சியில் 27.4.2008-ல் உ.வே.சா. நினைவு இல்லம் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் உ.வே.சா. நினைவு இல்லத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், இனியாவது அந்த உ.வே.சா. நினைவு இல்லம் மூடிக்கிடக்கும் நிலையினைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.