Home நாடு ஜோகூர் மந்திரி புசார் சட்ட திருத்தங்களை செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம் – மகாதீர் எச்சரிக்கை

ஜோகூர் மந்திரி புசார் சட்ட திருத்தங்களை செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம் – மகாதீர் எச்சரிக்கை

430
0
SHARE
Ad

mahathir-forehead1கோலாலம்பூர், ஜூன் 10 – சர்சைக்குரிய வீடமைப்பு சொத்துடைமை வாரியம் தொடர்பான சட்ட மசோதோ திருத்தங்களுடன் ஜோகூர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அந்த திருத்தங்களை ஜோகூர் மந்திரி புசார் செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்படாமல் இருக்கும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் எச்சரித்துள்ளார்.

“இது மலாய் பாரம்பரியம் சம்பந்தப்பட்டதாகும். சுல்தானாக இருக்கக் கூடியவர் ஒன்றுக் கூறினால் அதை பின்பற்றப்பட வேண்டும் என்பது மலாய் கலாச்சாரமாகும். எனவே, இந்தத் திருத்தங்களினால் மந்திரி புசார் சுல்தானுக்கு ஆலோசனை வழங்குவது என்ற நிலைமை மாறி சுல்தான் ஜோகூர் மந்திரி புசாருக்கு ஆலோசனை வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மலேசிய அரசியல் சாசனத்தை அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ள டாக்டர் மகாதீர், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பின்னபற்றபட்டு வரும் ஜனநாயக அரசமைப்பு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு மலேசிய அரசியல் சாசனத்திற்கு எப்போதும் முதன்மை முக்கியத்துவம் வழங்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் ஜோகூர் மாநிலத்தில் உள்ள நிலங்கள் வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்கப்படும் நிலைமை குறித்தும் கவலை தெரிவித்த மகாதீர் மாநில நிர்வாகம் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் அரசியல் சாசனம் என்பது அடிப்படை சட்டம் என்றும் அதை முறையாக பின்பற்றப்படா விட்டால் அது கலவரத்திற்கு வழிவகுக்கும் என்றும் மகாதீர் கூறினார்.