Home நாடு ‘நாம்’ திட்டத்திற்கு நிலம் வழங்க பேராக் அரசு ஒப்புதல் – சரவணன்

‘நாம்’ திட்டத்திற்கு நிலம் வழங்க பேராக் அரசு ஒப்புதல் – சரவணன்

500
0
SHARE
Ad

saravanan micஈப்போ, ஜூன் 11 – ‘நாம்’ அறவாரியம் வகுத்துள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு முதலில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் இந்த நிலத்தில்‘நாம்’ அதன் இலக்கை அடையுமேயானால் அடுத்தக்கட்டமாக கோரப்பட்ட நிலம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பேரா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீட் உறுதியளித்துள்ளதாக ‘நாம்’ அறவாரியத்தின் தலைவர் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ சரவணன் சொன்னார்.

‘நாம்’ அறவாரியத்தின் விவசாயத் திட்டத்திற்காக முதற்கட்டமாக 100 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு பேராக் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாயத் துறையில் இந்திய இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் ‘நாம்’ வகுத்துள்ள மிளகாய் பயிரிடுல் திட்டத்திற்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாநில அரசிடம் கோரிக்கையாக விடுத்திருந்தோம்.

முதற்கட்டமாக 100 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ள மாநில அரசு ‘நாம்’ கொண்டுள்ள இலக்கை இந்த 100 ஏக்கரில் அடையுமேயானால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மந்திரி புசார் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சரவணன்இதனைக் கூறினார்.

#TamilSchoolmychoice

மிளகாய் பயிரிடுவதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் அதன் மூலம் இந்திய இளைஞர்கள் அடையக் கூடிய நன்மைகள் ஆகியவை குறித்து மாநில மந்திரி புசாரிடம் விவரிக்கப்பட்டது.

“ஆரம்பத்திலேயே பல்லாயிரக்கணக்கான நிலத்தில் இதனை தொடங்குவதை விட குறைந்த நிலத்தில் தொடங்கி அதன் வெற்றியைக் கொண்டு இத்திட்டத்தை பல்லாயிரக்கணக்கான இடத்தில் பரவச் செய்யுங்கள் என ஸம்ரி ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்வதோடு இத்திட்டம் 5 ஆண்டு கால திட்டமாகும். ஆதலால், முதலில் சிறு இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி அதன் வெற்றியைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான நிலத்தில் பரவச் செய்யும் நடவடிக்கையை ‘நாம்’ மேற்கொள்ளும்” என்று சரவணன் கூறினார்.