Home உலகம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பாலசந்திரன்!

அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பாலசந்திரன்!

596
0
SHARE
Ad

palachanthiranஅமெரிக்கா, பிப்.21- தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியதைக்  குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவில் போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம்.

நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண சிறிலங்கா அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.