Home நாடு பிபிபி உறுப்பினர்கள் மலேசிய நண்பன் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

பிபிபி உறுப்பினர்கள் மலேசிய நண்பன் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

701
0
SHARE
Ad

PPP-Logo-Sliderகோலாலம்பூர், பிப்ரவரி 21 – தமிழ்ப் பத்திரிக்கையான “மலேசிய நண்பன்” அலுவலகத்திற்குள் நுழைந்த சுமார் 60 பிபிபி உறுப்பினர்கள், அந்தப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தி தங்களின் கட்சியைக் களங்கப்படுத்தி விட்டதென்றும் அதனால் அந்தப் பத்திரிக்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

ஏறத்தாழ பிற்பகல் 2.30 மணியளவில் மலேசிய நண்பன் அலுவலகத்திற்கு வந்த அந்த பிபிபி உறுப்பினர்கள் சுமார் 5 மணி நேரம் நண்பன் அலுவலகத்திற்குள் நுழைந்து முற்றகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த வேளையில் நண்பன் பத்திரிக்கையின் நிருபர் எல்.கே.ராஜ் அந்த உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஐந்து முறை தான் குத்தப்பட்டதாகவும், அதனால் தனது தலைப்பாகம், உடல் பகுதி மற்றும் வலது கால் காயமுற்றதாகவும் ராஜ் கூறியுள்ளார். ஆனால் சர்ச்சைக்குரிய கட்டுரையை அவர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தன்னைத் தாக்கியவர்களில் ஒருவன் தன்னை நோக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராஜ் கூறியுள்ளார்.

“நீ போலீசிடம் புகார் செய்தால் காணாமல் போய்விடுவாய்” என்று தான் மிரட்டப்பட்டதாகவும் அவர் கூடியிருந்த பத்திரிக்கை செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் இனி தனது அடையாளம் வெளியே தெரிந்துவிடும்என்பதால் தனது பாதுகாப்புக்கு தான் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.

பின்னர் நண்பன் அலுவலகத்திற்கு வருகை தந்து நண்பன் பொறுப்பாளர்களை சந்தித்த பிபிபி தலைவர் எம்.கேவியசுடன் அந்த பிபிபி உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டனர். நண்பன் அலுவலகம் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் பத்து கொம்ப்ளெக்ஸ் என்ற பகுதியில்அமைந்துள்ளது.

முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் நண்பன் அலுவலகப் பணியாளர்களிடம் முரட்டுத் தனமாகவும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் நடந்து கொண்டதாக நண்பன் பொறுப்பாளர்கள் கூறினர்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிபிபி தேசியத் தலைவர் கேவியஸ் இவ்வாறு நடந்து கொண்டவர்கள் பிபிபி உறுப்பினர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

-மலேசியாகினி