Home வணிகம்/தொழில் நுட்பம் குஜராத் மாநிலத்தில் மலேசிய நிறுவனம் டியூன் 100 தங்கும் விடுதிகளைக் கட்டுகின்றது.

குஜராத் மாநிலத்தில் மலேசிய நிறுவனம் டியூன் 100 தங்கும் விடுதிகளைக் கட்டுகின்றது.

689
0
SHARE
Ad

Tune-Hotel-Logoபுதுடில்லி, பிப்ரவரி – 21 – மலேசியாவில் குறைந்த விலை கட்டண தங்கும் விடுதியாக (ஹோட்டல்) புகழ்பெற்றுள்ள மலேசிய நிறுவனமான டியூன் ஹோட்டல் நிறுவனம், உலகின் மற்ற நாடுகளிலும் தங்கும் விடுதிகளை நிர்மாணித்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தனது முதல் தங்கும் விடுதியை அகமதாபாத் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் திறக்கவிருக்கின்றது என அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி மார்க் லெங்காஸ்டர்அறிவித்துள்ளார்.

டியூன் ஹோட்டல் நிறுவனம், ஏர் ஆசியா நிறுவனர் டோனி பெர்ணான்டசின் இன்னொரு வர்த்தகத் திட்டமாகும்.

#TamilSchoolmychoice

தனது முதல் தங்கும் விடுதியை திறந்தவுடன், அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 100 தங்கும் விடுதிகளை இந்தியாவின் மற்ற நகர்களில் திறக்க டியூன் ஹோட்டல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னேறிய பொருளாதார மாநிலமாக குஜராத் திகழ்வதாலும் இந்த மாநிலத்திலிருந்துதான் மிக அதிகமானோர் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள், தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என்ற காரணத்தினாலும் இந்த மாநிலத்தை தங்களின் முதல் நுழைவாயிலாக தேர்ந்தெடுத்ததாக மார்க் லெங்காஸ்டர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் ஏறத்தாழ பத்து லட்சம் குஜராத் மக்களும் அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் மக்களும் வாழ்கின்றார்கள் என்பதோடு, அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்நிலை மாநிலமாக இந்தியாவில் குஜராத் திகழ்கின்றது.

டியூன் தங்கும் விடுதிகளின் வாடகை இந்திய ரூபாய் 2,000 முதல் 2,400 வரை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் இந்த விவரங்களை வழங்கிய டியூன் ஹோட்டல் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மார்க் லெங்காஸ்டர் தங்களின் இந்திய திட்டத்தை செயல்படுத்த தாங்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகா திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.