Home நாடு பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: 70 சதவிகித வாக்குகள் பதிவாகும் – தேர்தல் ஆணையம் நம்பிக்கை

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: 70 சதவிகித வாக்குகள் பதிவாகும் – தேர்தல் ஆணையம் நம்பிக்கை

639
0
SHARE
Ad

Pengalan kubor

தும்பாட், செப்டம்பர் 25 – இன்று கிளந்தான் மாநிலம் பெங்கலான் குபோர் தொகுதியில் காலை 8 மணி தொடங்கி, 11 வாக்களிப்பு மையங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணியோடு வாக்களிப்பு நிறுத்தப்படும்.

#TamilSchoolmychoice

இத்தொகுதியில் சுமார் 23, 929 பேர் வாக்களிக்கத் தகுதியானர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், கடந்த 13 வது பொதுத்தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான இத்தொகுதியில், இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் சுமார் 70 சதவிகிதம் பேர் வாக்களிப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மட் ரஸி மட் அலியும் அவரை எதிர்த்து பாஸ் கட்சி வேட்பாளர் வான் ரோஸ்டி வான் இப்ராகிம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் இஸாட் புகாரி இஸ்மாயில் புகாரியும் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 20 -ம் தேதி பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் (படம்) புற்று நோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து இன்று அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.