Home இந்தியா டெல்லி டெசோ மாநாடு: காங்கிரசை கழற்றி விட்ட தி.மு.க.

டெல்லி டெசோ மாநாடு: காங்கிரசை கழற்றி விட்ட தி.மு.க.

559
0
SHARE
Ad

karuபுது டெல்லி, பிப். 25 – தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்து விட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது.

டெல்லியில் வரும் 7 ம் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பா.ஜ. க தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஆனால் காங்கிரசை புறக்கணிக்க தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக இன்று சென்னையில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பாலச்சந்திரன் படுகொலை குறித்தும் விவாதித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம். தி.மு.க. வின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்திருக்கும் காங்கிரஸ் மேலிடம், டெசோவின் பெயரால் லோக்சபா தேர்தலுக்கான ஒரு கூட்டணியை மறைமுகமாக கருணாநிதி உருவாக்குகிறாரோ என்று சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.